ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச்சுமையை குறைக்கும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு


ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச்சுமையை குறைக்கும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 25 Jan 2025 8:58 PM IST (Updated: 25 Jan 2025 9:51 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

டெல்லி,

நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பல ஆண்டுகளாக நிலவி வரும் காலனித்துவ மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலேயே காலத்தின் குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக 3 புதிய கிரிமினல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காலனித்துவ மனப்பான்மையில் இருந்து மாற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் நிர்வாக திறன் மேலும் மேம்படும், நிதிச்சுமை குறையும். மேலும், பல்வேறு நன்மைகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் கிடைக்கும். நாடு சுதந்திரம் பெற்றபோது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வருமை, பசி, பட்டினி நிலவியது. ஆனால், நாம் நம்மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கினோம்.

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு சாசனத்தால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளே காரணம்.

சமீபமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. இது வேலைவாய்ப்பு, விவசாயிகள், தொழிலாளர்களின் வருவாயை உயர்த்தி பலரை வறுமையில் இருந்து மீட்டுள்ளது' என்றார்.


Next Story