இந்தியா-தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: பூரி ஜெகநாதர் பாதங்களில் முதல் டிக்கெட்டை வைத்து பூஜை


இந்தியா-தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: பூரி ஜெகநாதர் பாதங்களில் முதல் டிக்கெட்டை வைத்து பூஜை
x

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் டிக்கெட் பூரி ஜெகநாதர் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பூரி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி 9-ந்தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான 23 ஆயிரம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை தொடங்கி உள்ளது. இந்த 20 ஓவர் போட்டிக்கான முதல் டிக்கெட்டை, போட்டி சுமுகமாக நடைபெற ஆசிர்வாதம் கோரி, ஒடிசா கிரிக்கெட் சங்கம் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

ஒடிசா கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுடன், செயலாளர் சஞ்சய் பெகெரா பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு சென்று அங்கு முதல் டிக்கெட்டை ஜெகநாதர் சாமியின் தாமரை பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். பின்னர் ஒடிசா கிரிக்கெட் சங்க தலைவர் பங்கஜ் லோச்சன் மொகந்தி மற்றும் பெகெரா ஆகியோர் முதல் மந்திரி மோகன் சரண் மாஜியை அவரது இல்லத்தில் சந்தித்து டிக்கெட்டை வழங்கினர்.

1 More update

Next Story