ஐதராபாத் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மும்பையில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
மும்பை,
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு இன்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த நிலையில் மராட்டிய வான் பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது. இது குறித்து விமானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story






