ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தை


ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தை
x

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லி,

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் 31 மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது.

போராட்டத்தை கமேனி தலைமையிலான அரசு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். தொடர்ந்து போராடுங்கள் உங்களுக்கு ஆதரவு வந்துகொண்டிருக்கிறது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதனால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான், அமெரிக்கா இடையேயான தூதரக உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் அரசியல் குழப்பம் நிலவி வருவதால் அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் அராச்சி இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈரானில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் அராச்சியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story