பறக்கும் படை சோதனை: ரூ.34 கோடி ரொக்கம், மதுபாட்டில்கள் சிக்கின

கடந்த 6-ந் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.34 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாட்னா,
தேர்தலையொட்டி பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களை கவர ரொக்கப்பணமோ, இலவச பொருட்களோ வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 6-ந் தேதியில் இருந்து இதுவரை வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட ரொக்கப்பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், இலவச பொருட்கள் என மொத்தம் ரூ.34 கோடி மதிப்புள்ள பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
Related Tags :
Next Story






