காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்


காஷ்மீர்:  பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
x
தினத்தந்தி 9 Aug 2025 10:48 AM IST (Updated: 9 Aug 2025 11:03 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு காஷ்மீரில் அகால் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 9 நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின. சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் வன பகுதிகளில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் நேற்றிரவு வீரமரணம் அடைந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் பிரீத்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுடைய மறைவுக்கு இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் எங்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story