டெல்லியில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் - அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் - அரவிந்த் கெஜ்ரிவால்
x

வேலைவாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிபட கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர்,

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதன்மையான முன்னுரிமை. ஆம் ஆத்மியின் குழு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு 2 ஆண்டுகளுக்குள் 48 ஆயிரம் அரசு வேலைவாய்ப்பினை வழங்கி உள்ளோம். இளைஞர்களுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார்த் துறை வேலைகளை வழங்க இருக்கிறோம். வேலைவாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் நோக்கங்கள் நேர்மையானவை. மக்களின் ஆதரவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. 70 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளும் ஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை கூடுதலாக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி காய்களை நகர்த்தி வருகிறது. மறுபுறம், காங்கிரஸ், பாஜக தொகுதிகளை வெல்ல போராடி வருகின்றன. டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story