கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது


கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 29 Oct 2024 12:15 AM IST (Updated: 29 Oct 2024 1:02 AM IST)
t-max-icont-min-icon

கேரள முதல் மந்திரியின் கன்வாயில் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது அணிவகுப்பு(கன்வாய்) பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்னால் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் திடீரென குறுக்கே சென்றுள்ளார்.

இதைப்பார்த்ததும் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் முதல் மந்திரி பினராய் விஜயனின் கார் உட்பட பாதுகாப்பு அணிவகுப்பில் இருந்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதல் மந்திரி பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பினார். தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

1 More update

Next Story