கேரளா: போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்து - வியாபாரி பலி


கேரளா: போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்து - வியாபாரி பலி
x
தினத்தந்தி 12 March 2025 9:52 PM IST (Updated: 13 March 2025 12:12 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் போலீசார் சென்ற ஜீப் விபத்துக்குள்ளாகி வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் போலீசார் கண்ணூரில் இருந்து குற்றவாளி ஒருவரை சுல்தான் பத்தேரிக்கு போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். இந்த ஜீப்பில் 3 போலீசார் உட்பட 4 பேர் சென்றனர். வள்ளியூர்கா அருகே 3 மணியளவில் ஜீப் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் போலீஸ் ஜீப் சாலையை விட்டு விலகி சாலை ஓரம் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீதரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜீப் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் போலீசார் உட்பட 4 பேர் காயமடைந்தனர். பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story