கேரள பல்கலைக்கழக தேர்வில் கடந்த ஆண்டு வெளியான வினாத்தாள் வினியோகம்; மாணவர்கள் அதிர்ச்சி


கேரள பல்கலைக்கழக தேர்வில் கடந்த ஆண்டு வெளியான வினாத்தாள் வினியோகம்; மாணவர்கள் அதிர்ச்சி
x

புதிய தேர்வு நடத்துவது குறித்து கல்வி வாரியம் முடிவெடுக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான உளவியல் மாணவர்களுகு மன அழுத்த மேலாண்மை கலை தேர்வு கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வினாத்தாளாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் தேர்வு கண்காணிப்பு அதிகாரியிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியபோது, ‘‘பொதுவாக, 3 வெவ்வேறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் ஒரு தொகுப்பு வினாத்தாள் மட்டும் கடந்த ஆண்டில் உள்ளது தவறாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. புதிய தேர்வு நடத்துவது குறித்து கல்வி வாரியம் முடிவெடுக்கும்’’ என்றார்.

1 More update

Next Story