நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு மையம் - ரெயில்வே மந்திரி தகவல்


நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு மையம் - ரெயில்வே மந்திரி தகவல்
x

டெல்லி ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு மையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் பலியானார்கள். இதனால் பண்டிகை காலங்களில் இதுபோன்ற நெருக்கடிகளை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.இதன் அடிப்படையில், ‘யாத்ரி சுவிதா கேந்திரா’ என்ற பயணிகள் காத்திருப்பு மண்டபம் டெல்லி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘பயணிகள் சீராக பயணிக்க வசதியாக இந்த மையம் கட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இது ரெயில் நிலையத்தை சுற்றி கூட்டத்தை குறைக்க உதவும் என்றும், டிக்கெட் கவுண்ட்டர்களும் இந்த மையத்துக்குள்ளேயே மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இதுபோல நாடு முழுவதும் 76 ரெயில் நிலையங்களில் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். தொடக்கத்தில் 5 ரெயில் நிலையங்கள் என்றும், பின்னர் 55 ரெயில் நிலையங்கள் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story