மேட் இன் இந்தியா வாகனங்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி; பிரதமர் மோடி பெருமிதம்


மேட் இன் இந்தியா வாகனங்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி; பிரதமர் மோடி பெருமிதம்
x

இந்தியா, பிற நாடுகளின் இறக்குமதியை சார்ந்திருப்பது பெருமளவில் குறையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தின் ஹன்சல்பூர் நகரில் இ-விடாரா என்ற பெயரில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகன உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரதமர் மோடி கொடியசைத்து அதனை தொடங்கி வைத்து உள்ளார்.

தூய எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை இயக்கத்திற்கான உலகளாவிய மையம் ஆவதற்கான இந்தியாவின் நோக்கத்தின் மிக பெரிய முன்னெடுப்பு இதுவாகும். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இது ஏற்றுமதி செய்யப்படும்.

இதேபோன்று புதிய மின்சார பேட்டரி உற்பத்தியும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பிற நாடுகளின் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பது பெருமளவில் குறையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுய சார்பு மற்றும் பசுமை இயக்கத்திற்கான இந்தியாவின் முன்னெடுப்பிற்கான ஒரு சிறந்த தினம் என்று பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டு உள்ளார்.

இதனால், இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்டு ஆகியவற்றின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

1 More update

Next Story