மராட்டிய மாநிலம்: 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

ஜன்னலில் தடுப்பு கம்பிகள் எதுவும் இல்லாததால் குழந்தை தவறி விழுந்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது தளத்தின் ஜன்னலில் இருந்து 4 வயது குழந்தை தவறி விழுந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவத்தன்று குழந்தையின் தாய் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தையை ஜன்னல் அருகே இருந்த மேஜை மீது உட்கார வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிப்பதற்காக தாய் சென்றுள்ளார். அப்போது குழந்தை ஜன்னல் அருகே நகர்ந்து சென்றுள்ளது. ஜன்னலில் தடுப்பு கம்பிகள் எதுவும் இல்லாததால் குழந்தை தவறி விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story






