பெண்களின் உள்ளாடைகளாக பார்த்து திருடி, அணிந்து, செல்பி எடுத்த நபர்


பெண்களின் உள்ளாடைகளாக பார்த்து திருடி, அணிந்து, செல்பி எடுத்த நபர்
x
தினத்தந்தி 21 Jan 2026 2:41 PM IST (Updated: 21 Jan 2026 5:32 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அவரை தேடி பிடித்தனர்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஹெப்பகோதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அமல். இவர் அந்த பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தின் முன்புற பகுதியில் துவைத்து, காய போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளாக பார்த்து திருடி சென்றுள்ளார்.

இதன் பின்னர் வீட்டிற்கு சென்று அவற்றை அணிந்து பார்த்திருக்கிறார். அவற்றை அணிந்தபடியே செல்பி மற்றும் வீடியோவும் எடுத்திருக்கிறார்.

இதுபற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. இதனடிப்படையில் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அவரை தேடி பிடித்தனர். விசாரணையில், பெண்களின் உள்ளாடைகளை திருடி, அவற்றை அணிந்து வீடியோவாக எடுத்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

அவருடைய வீட்டுக்கு சென்ற போலீசார், சோதனை செய்ததில் இதுபோன்று திருடப்பட்ட பல பெண்களின் உள்ளாடைகள் மறைவாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. அவற்றை பார்த்து அதிர்ந்த போலீசார் பின்பு அவற்றை பறிமுதல் செய்தனர். அந்நபர் விசாரணைக்கு பின், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story