5 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற பெண் - அதிர்ச்சி சம்பவம்


5 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற பெண் - அதிர்ச்சி சம்பவம்
x

மகனை கழுத்தை நெரித்து கொன்ற அனுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புன்னசெரி பகுதியை சேர்ந்தவர் அனு (வயது 38). இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஹர்ஷன் மகன் இருந்தான். ஹர்ஷன் கக்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான். அனு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே, அனு கடந்த சில மாதங்களாக மனநல ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக மனநல சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், அனு இன்று காலை தனது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசுக்கு போன் செய்த அனு, மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அனுவின் வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டில் உள்ள அறையில் மயங்கிய நிலையில் கிடந்த ஹர்ஷனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஹர்ஷனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, மகனை கழுத்தை நெரித்து கொன்ற அனுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story