செங்கல்பட்டில் கட்டப்படும் ‘கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம்’ - அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கத்தின் இரண்டாம் தள பணி தற்போது நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் கட்டப்படும் “கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம்” பணிநிலையை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியில் உருவாகி வரும் “கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம்” பணிநிலையை நேரில் பார்வையிட்டார். இத்திட்டம் 2.6.2023 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு, 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திட்டத்தின் விவரங்கள்:-
அரசாணை எண் 23, நாள் - 04.09.2024, மொத்த திட்ட மதிப்பு - ரூ. 525 கோடி, நிலம் ஒதுக்கீடு - 37.99 ஏக்கர் கட்டிட உயரம் - அடித்தளம் + முதல் தளம் மொத்த கட்டிட பரப்பளவு - 2.08 இலட்ச சதுர அடி.
இதில் கண்காட்சி அரங்கம் – 91,924 சதுர அடி, பன்னோக்கு அரங்கம் – 50,633 சதுர அடி, கலையரங்கம் – 64,960 சதுர அடி
பணி துவக்கம் - 29.05.2025, பணிக்காலம் - 18 மாதங்கள், பணி நிறைவு இலக்கு - பிப்ரவரி 2026, தற்போதைய நிலை - இரண்டாம் தள பணி நடைபெற்று வருகிறது.
முக்கிய வசதிகள்:-
· கண்காட்சி அரங்கம் (10,000 நபர்கள் அமரும் வசதி)
· பன்னோக்கு அரங்கம் (5,000 நபர்கள் அமரும் வசதி)
· கலையரங்கம் (1,500 நபர்கள் அமரும் வசதி)
· VIP அறைகள்
· உணவுக் கூடம்
· பத்திரிக்கையாளர் அறை
· அலுவலக அறைகள்
· 1,638 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1,700 இரண்டு சக்கர வாகனங்களுக்கு நிறுத்துமிடம்
பெற்ற அனுமதிகள்:
· சுற்றுச்சூழல் அனுமதி
· DTCP அனுமதி
· கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி
· தீயணைப்புத் துறை அனுமதி
அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன், பொதுப்பணி துறை தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டம் நிறைவடைந்தவுடன், உலகத் தரத்திலான கண்காட்சி மற்றும் பன்னோக்கு அரங்கங்கள் தமிழகத்தின் சர்வதேச அடையாளமாக மாறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.








