கணவனின் தம்பியுடன் உல்லாசமாக இருக்க கோரிய மாமியார் - ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண் சித்ரவதை


கணவனின் தம்பியுடன் உல்லாசமாக இருக்க கோரிய மாமியார் - ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண் சித்ரவதை
x

குழந்தை இல்லை என்பதால் பெண்ணின் மாமியார் மூத்த மருமகளுடன், இளைய மகனுக்கு வாரிசு பெற்றெடுக்க முடிவு செய்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், போலவரத்தை சேர்ந்த இளம்பெண். இவருக்கும் ஜங்கா ரெட்டி கூடேமை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு இளம் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இளம் பெண்ணின் கணவரின் தம்பிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் அவரது மாமியார் மூத்த மருமகளுடன், இளைய மகனுக்கு வாரிசு பெற்றெடுக்க முடிவு செய்தார். மூத்த மகனை வேலைக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்தார்.

மூத்த மகன் வெளியூர் சென்ற பிறகு இளைய மகனுடன் இணைய வேண்டும் என மருமகளிடம் தெரிவித்தார். மாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்து மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர் மீது மாமியாருக்கு கடுமையான கோபம் வந்தது. இளைய மகனுடன் கட்டாயம் இணைய வேண்டும் என தெரிவித்தார்.

இளம்பெண் மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாமியார் மருமகளையும் அவரது குழந்தையும் அறையில் வைத்து பூட்டினார். அவர்களுக்கு உணவு, குடிநீர் தராமல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சித்ரவதை செய்து வந்தார். தாயும், ஒரு வயது குழந்தையும் உணவு இல்லாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

இளம்பெண் அறையில் வைத்து பூட்டப்பட்டு சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இளம் பெண்ணின் பெற்றோர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர். மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் போலீசாருடன் இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். போலீசார் வருவதை அறிந்த இளம் பெண்ணின் மாமியார் மற்றும் அவரது மைத்துனர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் அறையின் கதவை உடைத்து இளம் பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. தாயும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணின் மாமியார், மைத்துனரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story