மகனை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷில்பா (வயது 30). இவருக்கு திருமணமாகி அக்ஷயஜித் (வயது 5) என்ற மகன் இருந்தார்.
இந்நிலையில், ஷில்பா நேற்று வீட்டில் உள்ள அறையில் வைத்து தனது மகன் அக்ஷயஜித்தின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், வீட்டின் அறையில் ஷில்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஷில்பாவின் கணவர் வீட்டிற்கு வந்து அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது மனைவி தூக்கிட்ட நிலையிலும், மகன் சடலமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இந்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






