ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் 9 பேர் போலீசில் சரண்


ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் 9 பேர் போலீசில் சரண்
x

சரணடைந்த மாவோயிஸ்டுகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஞ்சி,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேபோல், கைது நடவடிக்கையையும் பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் லேட்கர் மாவட்டத்தை சேர்ந்த 9 மாவோயிஸ்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். இதையடுத்து, சரணடைந்த மாவோயிஸ்டுகளிடமிருந்து 12 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் தலைக்கு மொத்தம் ரூ. 23 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story