நிதிஷ் குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - பிரசாந்த் கிஷோர்


நிதிஷ் குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது - பிரசாந்த் கிஷோர்
x

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. முதல் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆட்சியைப் பிடிக்க 122 இடங்கள் தேவை.

முதல் கட்ட வாக்குப்பதிவில் தேஜஸ்வி-க்கு ஆதரவு அலை எழுந்ததுபோல் தோன்றியிருந்தாலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் கள நிலைமைகள் முற்றிலுமாக மாறியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஒரு நேர்காணலின்போது, கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், 'தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story