டிஜிட்டல் தங்கம் முதலீட்டில் கவனம் தேவை; செபி எச்சரிக்கை


டிஜிட்டல் தங்கம் முதலீட்டில் கவனம் தேவை; செபி எச்சரிக்கை
x

சில ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கின்றன.

புதுடெல்லி,

டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆன்லைன் வணிகத்தளங்கள், பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மூலமாக இந்த டிஜிட்டல் தங்கம் விற்கப்படுகிறது. இந்தநிலையில் டிஜிட்டல் தங்கம் முதலீடு தொடர்பாக இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரியம் (செபி) நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், டிஜிட்டல் தங்கம் முதலீட்டில் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “ஈ.டி.எப். தங்க பத்திரங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள் (மியூச்சுவல் பண்டுகள்) போன்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மூலம் முதலீடு செய்யப்படும் தங்கத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.

சில ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கின்றன. இவை வழக்கமான தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளும் கிடையாது” என கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story