பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்; கன்னியாஸ்திரி மீது வழக்குப்பதிவு

டெல்லியை சேர்ந்த வக்கீல் ஒருவர் திருவனந்தபுரம் சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பது குறித்த ஒரு சமூக வலைதள பதிவை செல்டன் எல் டி சோசா என்ற நபர் வெளியிட்டார். அந்த பதிவு குறித்த கமெண்ட் பகுதியில் பினராயி விஜயன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்து ஒரு கருத்து பதிவிடப்பட்டது. இது குறித்து டெல்லியை சேர்ந்த வக்கீல் ஒருவர் திருவனந்தபுரம் சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்தி கொச்சியை சேர்ந்த டீனா ஜோஸ் என்ற கன்னியாஸ்திரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் டீனா ஜோஸ் விசாரிக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
கன்னியாஸ்திரி டீனா ஜோசின் மத சபை, 2009-ம் ஆண்டில் அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ததாகவும், மத உடை அணிவதை தடை செய்ததாகவும் கூறி உள்ளது. மேலும் அவரது செயல்கள் முற்றிலும் அவரது தனிப்பட்ட முடிவு என கூறி உள்ளது.






