50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய மூதாட்டி - திக் திக் காட்சிகள்

இவர் நேற்று இரவு நேரத்தில் கிணற்றுக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 87 வயது மூதாட்டி சாந்தா வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இவர் நேற்று இரவு நேரத்தில் கிணறு அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இந்த கிணற்றில் 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இவர் கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்துக்கொண்டி சுமார் 4 மணி நேரம் கிணற்றில் போராடிக்கொண்டிருந்தார். மூதாட்டியின் பேரன்கள் காணவில்லை என தேடி உள்ளனர். இதனையடுத்து கிணற்றில் எட்டி பார்த்தனர். அப்போது மூதாட்டி கிணற்றில் இரும்பு பைப்பை பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறையினர் விரைவாக செயல்பட்டு 50 அடி கிணற்றுக்கும் ஒரு வலையை இறக்கி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.