ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றன.
ராஞ்சி,
மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் இருந்து நேற்று மதியம் 12.50 மணியளவில் ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதி ரெயில் நிலையத்திற்கு ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மதியம் 2.10 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா ரெயில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
அந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றன. ரெயில் தடம் புரண்டதில் தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story






