டெல்லி அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ரெயிலின் நான்காவது பெட்டி திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெயிலின் நான்காவது பெட்டி திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வடக்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் விபத்தால் அப்பகுதி வழியாக செல்லும் பல ரெயில்கள் தாமதமானதோடு, சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள், மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். அவர்கள், தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தினர். இதன் பின்னர் ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. ரெயில் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






