ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு - பிரதமர் மோடி சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார். ராஷ்திரபதி பவனில் நேற்று மாலை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு வந்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து இருக்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்முவும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story