கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி குகேஷின் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சனை இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது;
"ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியின் 6-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்."
என பிரதமர் மோடி கூறினார்.






