திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழாரம்

பாரத தாயின் இரு சிறந்த மகன்களான திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவிற்கு தலைவணங்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
டெல்லி,
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்த நாளில் பாரத தாயின் இரு சிறந்த மகன்களான திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவிற்கு நாம் தலைவணங்குவோம். தலைசிறந்த மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் தங்கள் உயிரை இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்து தேப்பற்று உணர்வை எழுப்பினர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






