பிரதமர் மோடி நாளை மறுதினம் கேரளா பயணம்

கேரள சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்,
140 இடங்களை கொண்ட கேரள சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் இடதுசாரி கூட்டணி, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மறுதினம் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், கேரளாவுக்கு 4 புதிய ரெயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மதுராங்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
Related Tags :
Next Story






