பிரதமர் மோடி 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்


பிரதமர் மோடி 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்
x
தினத்தந்தி 17 Sept 2024 9:59 PM IST (Updated: 17 Sept 2024 10:26 PM IST)
t-max-icont-min-icon

22-ஆம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். .முக்கியமாக, அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ஆம் தேதி நடைபெற உள்ள குவாட் கூட்டமைப்பின் 4-ஆவது மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார்.

செப்.22-ஆம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார். செப். 23-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.


Next Story