பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்; ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி இன்று  வாரணாசி பயணம்; ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் மேற்கொள்கிறார் .

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இன்று மதியம் 2 மணியளவில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை தொடங்கி வைக்கிறார்.

இதன்பின்னர், மாலை 4.15 மணியளவில் வாரணாசி நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டுகிறார். ஆக்ரா விமான நிலையத்தில் ரூ.570 கோடி மதிப்பில், தர்பங்கா விமான நிலையத்தில் ரூ.910 கோடி மதிப்பில், பக்தோக்ரா விமான நிலையத்தில் ரூ.1,550 கோடி மதிப்பில் குடிமக்களுக்கான புதிய பகுதிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.

ரேவா விமான நிலையம், மா மகாமாயா விமான நிலையம், அம்பிகாபூர் மற்றும் சர்சவா விமான நிலையம் ஆகியவற்றில் புதிய முனைய கட்டிடங்களையும் அவர் ரூ.220 கோடி மதிப்பில் திறந்து வைக்கிறார்.விளையாட்டுக்கு உயர்தர உட்கட்டமைப்பை வழங்கும் நோக்குடன், ரூ.210 கோடி மதிப்பில் வாரணாசி விளையாட்டு வணிகத்தின் 2-வது மற்றும் 3-வது கட்ட மறுவளர்ச்சிக்கான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

1 More update

Next Story