ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தரகாண்ட் பயணம்

பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தரகாண்ட் பயணம்
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி நாளை(2-ந்தேதி) அவர் உத்தரகாண்ட் செல்ல உள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணத்தின் முதல் நாளில், அரித்துவாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். தொடர்ந்து வரும் 3-ந்தேதி, உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் ஜனாதிபதி சிறப்பு உரையாற்ற உள்ளார். அதே நாளில், நைனிடால் ராஜ்பவனின் 125-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து வரும் 4-ந்தேதி, கைஞ்சி தாம் பகுதியில் உள்ள நீம் கரோலி பாபா ஆசிரத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார். பின்னர் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு ஜனாதிபதி டெல்லி திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com