எஸ்.ஐ.ஆரை தடுத்து நிறுத்தியிருந்தால்... மே.வங்க முதல் மந்திரி பரபரப்பு பேச்சு


எஸ்.ஐ.ஆரை தடுத்து நிறுத்தியிருந்தால்... மே.வங்க முதல் மந்திரி பரபரப்பு பேச்சு
x

எஸ்ஐஆர் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள் என்று மம்தா பானர்ஜி பேசினார்.

கொல்கத்தா,

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறுகிறது.

எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் வாக்கு திருட்டில் ஈடுபட பாஜக முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எதிர்ப்பை மம்தா பானர்ஜி கைவிட்டார்.

இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “எஸ்ஐஆர் அமல்படுத்தப்படாதிருந்தால் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும். வாக்குகள் இல்லாமல் இதைச் செய்திருப்பார்கள். அமித் ஷாவின் தந்திரம் உங்களுக்குப் புரிகிறதா?. நாங்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. நாங்கள் அதைச் செய்வோம், போராடுவோம், வெற்றி பெறுவோம். எஸ்ஐஆர் குறித்து நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்” என்றார்.அதேநேரத்தில் என்.ஆர்.சி பணிகளை நடத்த விட மாட்டோம் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்தார்.

1 More update

Next Story