குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ; ஒருவர் பலி


குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ; ஒருவர் பலி
x
தினத்தந்தி 4 July 2025 2:59 PM IST (Updated: 4 July 2025 4:34 PM IST)
t-max-icont-min-icon

2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்தார் தர்சிம் சிங். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டிஎஸ்பி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தர்சிம் சிங்கிற்கு 2 மனைவிகள் உள்ளனர்.

இதில் முதல் மனைவிக்கு மகன், மருமகள் இருந்தனர். இதனிடையே, தர்சிம் சிங்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், அமிர்தசரசின் மஜத் சாலை பகுதியில் உள்ள வீட்டில் தர்சிம் சிங்கின் முதல் மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வந்தனர். அங்கு இன்று காலை சென்ற தர்சிம் சிங்கிடம் மனைவி, மகன், மருமகள் அனைவரும் சேர்ந்து சொத்து குறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்சிம் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் தர்சிம் சிங்கின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி, மருமகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தப்பியோட முயன்ற தர்சிம் சிங்கை கைது செய்தனர்.

1 More update

Next Story