நாட்டை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி


நாட்டை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 May 2025 11:59 AM (Updated: 1 May 2025 12:01 PM)
t-max-icont-min-icon

ஒரு பில்லியனுக்கும் அதிகமான கதைகளை கொண்ட நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார்.

மும்பை,

மும்பையில் வேவ்ஸ் - உலக ஒலி - ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது. சினிமாவும், இசையும் உலகை இணைக்கிறது. திரைப்பட தயாரிப்பு, கேமிங், இசை உள்ளிட்டவற்றில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான கதைகளை கொண்ட நாடு இந்தியா.இந்தியா அனிமேஷன் மற்றும் கிராபிக் துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளாவிய சந்தையில் அனிமேஷன் துறையின் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மும்பையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், ஷாருக்கான், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story