தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி பேட்டி


தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி  பேட்டி
x
தினத்தந்தி 24 July 2024 12:05 PM (Updated: 24 July 2024 12:05 PM)
t-max-icont-min-icon

காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,

மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், தமிழகத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு ரெயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது. ரெயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. என தெரிவித்தார்.

1 More update

Next Story