ஒரே முகவரியில் சமந்தா, தமன்னா...பரபரப்பை கிளப்பிய வாக்காளர் பட்டியல்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
சமந்தா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் ஒரே முகவரியில் வசிப்பது போன்ற போலி வாக்காளர் பட்டியல் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா, ரகுல் பிரீத் உள்ளிட்ட சினிமா நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
விசாரணையில் புகைப்படங்கள் மற்றும் இபிஐசி(EPIC) எண்கள் மாற்றப்பட்டு, அந்த பட்டியல் போலியாக வெளியிடப்பட்டது கண்டறிப்பட்டது. காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






