தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் - அசாமில் பள்ளி தலைமை ஆசிரியை கைது


தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் - அசாமில் பள்ளி தலைமை ஆசிரியை கைது
x

தலைமை ஆசிரியை பதேமா காத்தூன் தனியாக பள்ளிக்கு சென்று கொடியை இறக்கியுள்ளார்.

திஸ்பூர்,

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், தேசியக் கொடியை கால்களால் மிதித்து அவமதிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியை பதேமா காத்தூன் என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “தலைமை ஆசிரியை பதேமா காத்தூன் ஆகஸ்ட் 15-ந்தேதி பள்ளியில் மாணவர்கள் முன்பு தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். ஆனால் அன்று மாலை தேசியக் கொடி முறைப்படி இறக்கப்படவில்லை. இது குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்த நிலையில், அடுத்த நாள் காலை பதேமா காத்தூன் தனியாக பள்ளிக்கு சென்று கொடியை இறக்கியுள்ளார்.

அப்போது கொடியை மடித்து வைப்பதற்கு கால்களை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story