ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் தாலி சங்கிலி பறிப்பு


ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் தாலி சங்கிலி பறிப்பு
x

கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் ஊட்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு ராணி, மைசூரு டவுன் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ராணி கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து ஜெயலட்சுமிபுரத்தில் ராணி, பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த நகையை காணவில்லை. அதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராணி, தேவராஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story