கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பல் - 21 பேர் பத்திரமாக மீட்பு


கொச்சி அருகே கடலில் கவிழ்ந்த கப்பல் - 21 பேர் பத்திரமாக மீட்பு
x

விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா,

கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த கண்டெய்னர் கப்பல் எதிர்பாராத விதமாக திடீரென கடலில் மூழ்கியது. சுமார் 184 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பல் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கொச்சி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அதில் சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story