சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிப்பு

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியர்வர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது.
இந்த விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரா்கள் மற்றும் ஒரு வீராங்கனை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.






