சத்தீஷ்கார் என்கவுன்டர்: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

துப்பாக்கிகள், வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜாபூர் மாவட்டம் இந்திரவதி தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கிகள், வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com