ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் தற்கொலை

ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் காலை 7.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார்.
அமராவதி,
ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அப்பகுதி தனுகு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும் அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்ற மூர்த்தி, 7.45 மணியளவில் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






