தொழில்நுட்பக் கோளாறு; சாலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு பராசு பகுதியில் இருந்து இன்று மதியம் 12.52 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி அந்த ஹெலிகாப்டரை சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த 5 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானிக்கு சிறு காயம் ஏற்பட்ட நிலையில், அதிர்ஷடவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story