நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து

புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
Published on

பாட்னா,

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல் மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10 சதவீதம் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும். எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com