‘இந்தியா வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க அரசியலமைப்பே காரணம்’ - பி.ஆர்.கவாய்


‘இந்தியா வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க அரசியலமைப்பே காரணம்’ - பி.ஆர்.கவாய்
x

நெருக்கடியில் உள்ள அண்டை நாடுகளில் இருந்து நம்மை பிரித்து காட்டியது அரசியலமைப்பு சட்டம் தான் என பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மந்தன்காட் தாலுகாவில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டு பேசியதாவது:-

“சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சொந்த ஊரான இங்கு நீதிமன்றம் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான காலத்திலும், போர் காலத்திலும் நமது நாடு ஒற்றுமையாக வளர்ச்சியை நோக்கி செல்கிறது. நாம் அவசரநிலை பிரகடனத்தை கூட சந்தித்து இருக்கிறோம். ஆனாலும் நமது நாடு ஒற்றுமையாகவும், வலிமையாகவும் உள்ளது.

அதற்கு சட்டமேதை அம்பத்கரின் அரசியலமைப்பு சட்டமே காரணம். நெருக்கடியில் உள்ள அண்டை நாடுகளில் இருந்து நம்மை பிரித்து காட்டியது அதுதான். நான் 22 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்து நீதியை பரவலாக்க பாடுபட்டேன். பல நீதித்துறை உள்கட்டமைப்பு திட்டங்கள் முடிக்கப்படுவதை உறுதி செய்து உள்ளேன்.

மும்பை ஐகோர்ட்டு கோலாப்பூர் கிளையில், 2 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடம் எனக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. மந்தன்காட் நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உதவிய மராட்டிய அரசுக்கு நன்றி.”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story