பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி


பொங்கல் பண்டிகை நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி
x

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.

இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story