தேர்தல்களில் மோசடி நடக்கிறது; ஆனால்... - பிரசாந்த் கிஷோர் புலம்பல்


தேர்தல்களில் மோசடி நடக்கிறது; ஆனால்... - பிரசாந்த் கிஷோர் புலம்பல்
x

பீகார் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பாட்னா,

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் ஏதோ தவறு நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கண்ணுக்குத்தெரியாத சில சக்திகள் விளையாடுகின்றன. மக்களுக்குத் தெரியாத கட்சிகளே லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றன. வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், இது குறித்து நான் குரல் கொடுக்குமாறும் சிலர் என்னிடம் கூறுகின்றனர். இது தோல்வி அடைந்தவர்கள் கூறுவது. என்னிடம் ஆதாரம் இல்லை’ என தெரிவித்தார்.

ஆனால் பல விஷயங்கள் சரியாக பொருந்தவில்லை, ஏதோ தவறு நடந்து விட்டது போல தெரிகிறது என்று கூறிய பிரசாந்த் கிஷோர், ஆனால் அது என்ன? என்றுதான் தெரியவில்லை என்றும் கூறினார். பீகார் தேர்தல் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்காக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்ததாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார்.

1 More update

Next Story