தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ விற்பனை; ஒரு கிலோ ரூ.1.11 லட்சமாம்


தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ விற்பனை; ஒரு கிலோ ரூ.1.11 லட்சமாம்
x

தங்கம் மட்டுமின்றி குங்குமப்பூ, பாதம், பிஸ்தா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களால் இந்த இனிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சுவீட்ஸ் கடையில் சாப்பிட கூடிய வகையில் தங்கத்தால் செய்யப்பட்ட சுவர்ண பிரசாதம் எனப்படும் விசேஷ இனிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் இந்த இனிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இனிப்பு தயாரிப்பில் உட்புறம் முழுவதும் 24 காரட் சுத்தமான, உண்ணக்கூடிய தங்க படலத்தால் மூடப்பட்டுள்ளது.

தங்கம் மட்டுமின்றி குங்குமப்பூ, பாதம், பிஸ்தா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களால் இந்த இனிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இனிப்பை வாங்குபவர்களுக்கு மரத்தால் ஆன பெட்டியில் வைத்து வழங்குவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதன் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும். தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த சுவர்ண பிரசாதத்தின் விலை ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாம்.

இதைத்தவிர, இந்த சுவீட்ஸ் கடையில் 24 காரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), காஜு கட்லி (கிலோ ரூ.3,500) மற்றும் லட்டு (கிலோ ரூ.2,500) போன்ற பிற ஆடம்பர இனிப்புகளையும் விற்பனைக்கு வைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு செல்வந்தர்கள் மற்றும் உயர் பெருநிறுவனங்களின் பரிசளிக்கும் கலாசாரத்தில் ஒரு புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. பாரம்பரிய இந்திய இனிப்புகளை, ஆரோக்கியம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாக ‘சுவர்ண பிரசாதம்' பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story