இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Feb 2025 4:42 PM IST
தமிழகத்தில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
- 7 Feb 2025 4:10 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குத்திய கத்தியை, கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
- 7 Feb 2025 4:09 PM IST
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
- 7 Feb 2025 4:07 PM IST
திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 7 Feb 2025 4:02 PM IST
புதுச்சேரி: மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 7 Feb 2025 3:50 PM IST
மணப்பாறை பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 5 பேர் கைதாகி உள்ளனர்.
- 7 Feb 2025 3:43 PM IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய கெமிக்கல் டேங்கரை வெல்டிங் வைத்து உடைக்கும் போது தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த பொருட்களுக்கும் தீ பரவி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
- 7 Feb 2025 2:34 PM IST
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது வரும் 12-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது.
- 7 Feb 2025 1:16 PM IST
ஜெகபர் அலி வழக்கு - செல்போன் ஆடியோ ஆய்வு
*சமூக ஆர்வலர் ஜெகபர் அலி வழக்கில் கைதான குவாரி உரிமையாளர்களின் செல்போன் ஆடியோ ஆய்வு
*சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்யும் சிபிசிஐடி போலீசார்
*ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டம்
*குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேரின் செல்போன்களில் உள்ள ஆடியோக்கள் மீட்பு
*ஜெகபர் அலி வழக்கில் கைதான 5 பேருக்கும் குரல் மாதிரி பரிசோதனை செய்ய வாய்ப்பு
- 7 Feb 2025 12:27 PM IST
பாலியல் தொல்லை புகார் - பள்ளியில் விசாரணை
*பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
*மணப்பாறை தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை
*பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தும் கல்வித்துறை அதிகாரிகள்
*பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட கல்வி அலுவலர்மாவட்ட கல்வி அலுவலர் பேபி உறுதி
பாலியல் சீண்டல் புகாரில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு - 5 பேர் கைது








